ருபாய் இரண்டாயிரத்தில் என்னென்ன தொழில்களை துவங்கலாம்?

எவனொருவன் பணமில்லாமல் பணம் செய்ய முடியாது என்ற கூற்றை நம்புகிறானோ, அவனால் பணம் வைத்துக்கொண்டும் பணம் செய்ய முடியாது.

2,000 ரூபாயில் என்ன தொழில் தொடங்கலாம் என்று சிறு துணுக்கு உங்களுக்கு கொடுக்கிறேன். நீங்கள் உண்மையிலேயே ஆர்வம் உள்ளவராக இருந்தால் இதைப்பற்றி தேடி அறிந்து கொள்ளுங்கள்😉.

Online-ல் மக்களுக்கு சேவை புரியும் வகையிலான PHP Scripts குறைந்தது 5 டாலர் முதல் உங்களுக்கு கிடைக்கும். (எடுத்துக்காட்டாக SEO Tools, Link shortener போன்றவைகள்). அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

இதனை இணையத்தில் ஒரு தளமாக மாற்ற Domain & VPS SERVER ஒன்று வேண்டும். இதையும் ஐந்திலிருந்து பத்து டாலர்களுக்குள் உங்களால் பெற முடியும்.

அவ்வளவுதான், உங்களுடைய VPS சர்வரில் PHP Script-ஐ உள்ளீடு செய்து அதனை ஒரு தளமாக மாற்றிக்கொள்ள முடியும்.

இதற்காக நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டிய தேவை கிடையாது. நீங்கள் எந்த அளவுக்கு உங்களுடைய தளத்தை பிறருக்கு சந்தைப் படுத்துகிறீர்கள் என்பதில்தான் உள்ளது உங்கள் திறன். இது சேவை வழங்கும் தொழில் என்பதால், தேவைப்பட்டவர்கள் தானாக உங்களுடைய தளத்திற்கு வருவார்கள். அதுமட்டுமல்லாமல் பிறருக்கு தேவையான சேவையை நீங்கள் வழங்குவதாக இருத்தல் வேண்டும்.

NETFLIX, HOTSTAR போன்ற தளங்களும் இதுபோன்ற தொழில்களையே சாரும். தேவை என்பவர்கள் சந்தாதாரர்களாக மாறி அதைப் பயன்படுத்தப் போகிறார்கள் அவ்வளவுதான்.

{எனக்கு தெரிந்து 2000 ரூபாயில் அசாதாரண தொழில் என்றால் அது இதுதான்😊😊}…

இதுபற்றி ஒரு முழுநீளப் பதிவை விரைவில் வெளியிடுகிறேன்😊…

Leave a Reply

Your email address will not be published.