நான் ஆராய்ந்து பார்த்தவரை, ஒலிப் புத்தகங்களை வெளியிட சிறந்த தளம் Anchor என்றுதான் கருதுகிறேன். அதனுடைய உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதில் எளிதாக உங்களுடைய ஒலிப்புத்தகத்தை வெளியிட முடியும்.

நான் திறன்பேசி பயன்படுத்துவதால், அதில் எவ்வாறு உங்களுடைய பாட்காஸ்டை வெளியிடலாம் எனக் கூறுகிறேன்.

முதலில் அந்த செயலியை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு உங்களுடைய கணக்கை அதில் துவங்க முடியும்.

கணக்கை துவங்கியதும் அதனுடைய முகப்பில் உள்ள plus symbol-ஐ சொடுக்கினால்,

இந்த பக்கத்திற்கு உங்களை கொண்டு செல்லும். இதில் நீங்கள் நேரடியாக உங்களுடைய குரலை பதிவு செய்யலாம் அல்லது ஏற்கனவே நீங்கள் பதிவு செய்து, தயார் நிலையில் வைத்திருக்கும் கோப்பை உள்ளீடு செய்யலாம்.

ஏற்கனவே பதிவு செய்த கோப்பை உள்ளீடு செய்ய Library-ஐ சொடுக்கவும்.

பின்னர் இந்த பக்கத்தில் import என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுடைய கோப்பை இதில் இணைக்கலாம்.

பிறகு உங்களுடைய கோப்பு இந்தப் பக்கத்திலே வந்து சேரும். அதிலுள்ள பிளஸ் பொத்தானை அழுத்தி,

Add segment to episode என்பதை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு Publish என்ற பொத்தானை சொடுக்கினால்,

உங்களுடைய ஒலிப்புத்தகத்திற்கு தேவையான உள்ளீடுகளை கொடுக்கும் பக்கம் திறக்கும். அதில் Title, Description முற்றும் Thumbnail-களை உள்ளீடு செய்து, episode-ஆக வெளியிட விரும்பினால், அதையும் குறிப்பிட்டு, Publish Now கொடுத்தால் உங்களுடைய ஒலிப்புத்தகம் வெளியாகிவிடும்.

(முக்கிய குறிப்பு:- நான் ஏன் இந்த செயலியை பரிந்துரை செய்கிறேன் என்றால், இங்கே நீங்கள் வெளியிடும் உங்களுடைய பதிவுகள் பல பாட்காஸ்ட் தளங்களுக்கு இலவசமாகவே பகிரப்படும். நீங்கள் தேடித் தேடி ஒவ்வொரு தளத்திலும் வெளியிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது😊.)

அப்படியே என்னுடைய பாட்காஸ்டிலும் Verum Giri Tamil Podcast இணைய விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

நிச்சயம் இந்தப் பதிவு Podcast தொடங்கவேண்டும் என நினைப்போருக்கு, தேவைப்படும் ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் சந்தேகம் இருப்பின் கருத்து பகுதியில் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.