Digital marketing career தமிழ் (2022) | டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது

Is digital marketing have a good career in 2022

 

நாம் அனைவருக்குமே நம்முடைய வேலையைத் தேர்வு செய்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. நீண்ட நாள் ஒரு வேலையில் நாம் நீடித்து இருக்க, அந்த வேலை நமக்கு பிடித்த வண்ணமாக இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் அந்த வேலையில் ஒரு நிலைத்தன்மையை நாம் கொண்டிருக்க முடியும். 

 

தற்போதுள்ள தலைமுறைக்கு இந்த digital marketing career பற்றி யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. ஆனால் ஒரு சராசரி வேலையில் இருக்கும் வாய்ப்புகளை விட, இந்தத் துறையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வண்ணம் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. 

 

Why should I know about digital marketing? ஏன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி அனைவரும் அறிய வேண்டும்?

 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைதான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும்  துறையாகும். தற்போதுள்ள காலகட்டத்தில் ஸ்பான்ஃபோன் இல்லாத ஆளைக் காண்பது அரிதானது. கையில் போனை எடுத்தாலே instagram whatsapp facebook youtube என்று அதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் அது சார்ந்த துறையில் நாம் பணியில் சேர்வது நம் எதிர்காலத்திற்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். 

பத்து இருவது ஆண்டுகளுக்கு முன்னதாக, மார்க்கெட்டிங் துறையானது ஒரு குறுகிய வட்டத்தில் அடைந்து கிடந்தது. ஆனால் இன்று, உலகில் எந்த மூலையில் இருந்து கொண்டும், ஒரு பொருளை குறைந்த செலவில் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தலாம். அந்த அளவுக்கு இணையத் துறை பன்மடங்கு வளர்ந்து விட்டது. இது போன்ற ஒரு துறை பற்றி நாம் அறியாமல், அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருக்க நினைப்பது, நமது எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமையலாம்.

 

“நோக்கியா நிறுவனம் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த நிறுவனம் முற்றிலும் அழிந்து போனதற்கு காரணம், காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளாததே”

 

Digital marketing is evolving field.  டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு வளர்ந்து வரும் துறை:

இதை ஏன் நான் அனைவருக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன் என்றால், மற்ற துறைகளை விட பன்மடங்கு அதிவேகத்தில் இந்த துறை வளர்ந்து வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 20 முதல் 25 சதவீதம் இந்த துறையின் வளர்ச்சி இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்போதைய இது பற்றி சிறிது சிறிது நம் அறிவை வளர்த்துக் கொண்டால், எதிர்காலத்தில் நாம் ஒரு நல்ல நிலையை அடைய இந்த துறையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

 

What are the demands in digital marketing. டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையின் தேவை எப்படி இருக்கிறது:

LinkedIn வலைதளத்தின் கருத்துக்கணிப்பு மூலம், தேவை அதிகமாக இருக்கும் முதல் 10 வேலைகளில் Digital marketing Specialist என்ற வேலை அடங்கும். சுமார் ஆண்டொன்றுக்கு, 8 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்பு இந்த துறையில் மட்டுமே கொட்டிக் கிடக்கிறது. இந்த துறையில், சோசியல் மீடியா மார்க்கெட்டிங், கண்டன்ட் மார்க்கெட்டிங், எஸ்.இ.ஓ மற்றும் அனலெட்டிக்ஸ் போன்று பல கிளைத் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் மார்க்கெட்டிங் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது என்றும் ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. 

 

இந்தத் துறையில் லட்சக்கணக்கான பணியிடங்கள் இருந்தாலும், இது சார்ந்து பெரும்பாலான நபர்கள் அறியாமல் இருப்பதால், இந்த 2022 ஆம் ஆண்டை உங்களுக்கான ஒரு வாய்ப்பாக நீங்கள் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். 

 

Some good jobs in digital marketing.  டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் சில சிறந்த பணிகள்:

  1. Email Marketing: இமெயில் மார்க்கெட்டிங் என்பது மின்னஞ்சல் வழியாக ஒரு விஷயத்தை மார்க்கெட்டிங் செய்வதாகும். தற்போது அனைத்து நபர்களுக்குமே ஈமெயில் என்பது பிரதானமாக இருக்கிறது. மின்னஞ்சல் மூலமாக மார்க்கெட்டிங் செய்வது என்பது மிகவும் எளிதான. முதலில் ஒரு குறிப்பிட்ட துறை சார் அவர்களுடைய மின்னஞ்சல் அனைத்தையும் சேகரித்து. நீங்கள் எந்த பொருளை விளம்பரம் செய்யப் போகிறீர்களோ அதை ஒரு மின்னஞ்சலாக அந்த பயனர்களுக்கு அனுப்பும் போது, நூற்றில் ஒரு நபர் நிச்சயம் அதை கிளிக் செய்து அந்த பொருளை வாங்கும் வாய்ப்பு அதிகம். இதுவே ஒரு லட்சம் நபருக்கு அனுப்புகிறீர்கள் என்றால் மிகவும் எளிமையாக ஆயிரம் நபர்களை ஒரு பொருளை நாம் வாங்க வைத்துவிடலாம்.
  2. Search Engine Optimization: டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேசன் என்பது தான். அதாவது வலைப்பக்கத்தில் நம் இணையதளத்தை முதல் பக்கத்தில் கொண்டு வருவதற்காக நாம் கொடுக்க வேண்டிய உள்ளீடுகள். இது பல காரணிகளை உள்ளடக்கியது. இந்த வேலைக்கும் தற்போது தேவை அதிகமாகவே இருக்கிறது. ஒருவர் என்ன தேடுகிறார், எப்படி தேடுகிறார் எந்த இடத்தில் இருந்து தேடுகிறார் என அனைத்தையும் அறிந்து அதற்கு ஏற்றவாறு உள்ளடக்கத்தை உருவாக்குவதே SEO என்பதாகும். 
  3. Content Writing: இது பெரும்பாலும் இணையதளத்தில் பொருட்களை விற்பவர்களுக்கு தேவைப்படும். தங்களுடைய பொருள் சார்ந்த விஷயங்களை ஒரு உள்ளடக்கமாக எழுதி தருவதை கண்டன் ரைட்டிங் என்பதாகும். அந்த பொருள் சார்ந்த அனைத்து விதமான விஷயங்களும் இதில் அடங்க வேண்டும். இதற்கு ஆங்கில அறிவு நிச்சயம் இருக்க வேண்டும். 
  4. Copy Writing: காப்பி ரைட்டிங் என்பது விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படுவது. ஒரு பொருள் சார்ந்த அனைத்து விஷயங்களையும் ஒரு சில வரிகளில் அடக்கி விடுவது தான் காப்பி ரைட்டிங். உதாரணமாக உஜாலா சொட்டு நீலம் விளம்பரத்திற்கு, அதைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் விளக்காமல் “நாலு சொட்டு தானே ஆஹா” என்று எளிமையாக கூறியிருப்பார்கள். இந்த துறைக்கும் தற்போது தேவை அதிகமாகவே இருக்கிறது. 
  5. சோசியல் மீடியா மார்க்கெட்டிங்:- இதைப் பற்றி பெரும்பாலும் அனைவருமே அறிந்திருப்பீர்கள். சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு பொருளை சந்தைப்படுத்துவது தான் சோசியல் மீடியா மார்க்கெட்டிங். நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சமூக வலைதளங்களிலும் ஏதோ ஒரு விளம்பரம் யாரோ ஒருவர் மூலமாக கட்டாயம் பார்ப்பீர்கள். இதுதான் தற்போது இணைய உலகை வழி நடத்தி செல்கிறது எனலாம். விளம்பரங்கள் தான் எல்லாமே. இதை நீங்கள் சொந்தமாகவும் செய்யலாம், அல்லது இது பற்றி தெரியாதவர்களுக்கு விளம்பரம் செய்து கொடுப்பது மூலமாகவும் பணம் ஈட்டலாம். 
  6. நேரடி விளம்பரம்: கூகுள் தான் தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்த கூகுள் தளத்திற்கு சென்று கூகுள் ads மூலமாக யாராக இருந்தாலும் தங்களுடைய பொருட்களை நேரடியாகவே சந்தைப்படுத்த முடியும். இதில் பல நிறுவனங்கள் விளம்பர ஏஜென்சி மூலமாக வேலை ஆட்களை பணி அமைத்து கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுகிறார்கள். 

நான் எப்படி இந்த துறையில் என் வேலையை தொடங்குவது: 

 

முதலில் நான் மேலே குறிப்பிட்ட விஷயங்களை பற்றிய அடிப்படை அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு இதைப் புரிந்து கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு இதை எப்படி சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் சிந்தனையானது எடுத்துரைக்கும். தற்போது இதற்கு பல கோச்சிங் சென்டர் வந்துள்ளது. பணம் படைத்தவர்கள் தாராளமாக அதில் இணைந்தும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். பணம் தொடக்கத்தில் முதலீடு செய்ய முடியாது என எண்ணுபவர்கள், யூடியூபில் இது சார்ந்த காணொளிகள் பல ஆயிரம் கணக்கில் இருக்கிறது. தேவையில்லாமல் Shorts காணொளிகளில் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை சார்ந்து யூடிபில் நீங்கள் கற்றுக் கொள்வது, உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

 

இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இதுபோன்று மேலும் பல நல்ல பதிவுகளுடன் சந்திப்போம். 

 

நன்றி

 

Leave a Reply

Your email address will not be published.