What is NFT in Tamil [NFT என்றால் என்ன?]

சமீபகாலங்களாகவே கிரிப்டோகரன்சி மற்றும் NFT போன்ற வார்த்தைகள் பெரும்பாலான இடங்களில் பேசப்படுகிறது. இதில் கிரிப்டோகரன்சி பற்றி நிறைய பேர் எழுதி உள்ளார்கள். ஆனால் NFT என்பது பற்றி மக்களிடையே சரியான புரிதல் இல்லை என்றுதான் நினைக்கிறேன். 

NFT என்றால் என்ன?

இதன் விரிவாக்கம் ஆங்கிலத்தில் Non Fungible Token என்பதாகும். இதனுடைய பெயரில் இருந்தே இதன் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். Fungible Token என்றால் ஒரே மாதிரி இருக்கும் பல விஷயங்களுக்கு, ஒரே மதிப்பு இருப்பது என்று பொருள். எடுத்துக்காட்டாக நம்முடைய இந்தியப் பணத்தையே எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் உங்களுடைய கையில் பத்து நூறு ரூபாய்த் தாள் வைத்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்தப் ஒவ்வொரு நூறு ரூபாய்த் தாளின் தனிப்பட்ட மதிப்பும் 100 ரூபாய் தான். அந்தப் பத்து 100 ரூபாய் தாளை பிறருக்கு பகிர்ந்து கொடுத்தால், அதனுடைய மதிப்பும் 100 ரூபாய்தான். அதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. அதனால் ஒரே மதிப்புடைய பொருள் பலரிடமிருக்க வாய்ப்புள்ளது. யாரும் அதற்கு தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது.

இதற்கு அப்படியே எதிர்மாறானது தான் Non Fungible Token என்பது. அதாவது ஒரு புகைப்படத்தை நான் NFT ஆக மாற்றினால், அதற்கென்று ஒரு தனிப்பட்ட உரிமம் கிடைத்துவிடும். உலகிலேயே அந்த ஒரு புகைப்படம் மட்டும் தான் இருக்கிறது என்பதுபோல, ஓர் குறிப்பிட்ட மதிப்பைக் கொண்டு செயல்படும். அதன் உரிமையாளரைத் தவிர வேறு யாரும் இதை சொந்தம் கொண்டாட முடியாது. 

(சில அறிவில் மூத்தோர்கள் ‘டேய் நான் Mouseல Right கிளிக் பண்ணி, Save பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் டா’ என்று கூறுவது எனக்குக் கேட்கிறது.)

நீங்கள் என்னதான் உங்களுடைய கணினியில் இதுபோன்று குறுக்கு வழியில் சேகரித்தாலும். அதற்கென்று இருக்கும் உரிமம் உங்களுக்குக் கிடைக்காது. அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியுமே தவிர, அதை எந்த சந்தையிலும் உங்களால் விற்பனை செய்ய முடியாது. நீங்கள் பயன்படுத்துவதை அதன் உரிமையாளர் பார்த்தால், உங்கள் மீது வழக்கு தொடுக்கவும் முடியும். இதுதான் Non Fungible Token-ன் சிறப்பு. 

NFT-ன் முக்கியத்துவங்கள் என்னென்ன? [Importance of NFT]

 1. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் மயம் என்பதால், இதன் பரிவர்த்தனைகள் எளிமையாக இருக்கும். 
 2. தரகர்கள், டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் மூலம் ஏமாற்றப்படுவதை முற்றிலுமாக நாம் தவிர்க்கலாம். 
 3. நேரடியாக விற்பவரிடமோ அல்லது வாங்குவரிடமோ தொடர்பு கொள்ளலாம்.
 4. இது முற்றிலும் புதுவிதமான சந்தைமுறையை உலகிற்கு அமைத்துத்தர வாய்ப்புள்ளது. 
 5. எதிர்காலத்தில் நீங்கள் வைத்திருக்கும் வீடு, பொருள், நிலம் போன்ற அனைத்தையும் முதலில் NFT- ஆக மாற்றி, பின்னர் இணையத்திலேயே நேரடியாக உங்கள் விருப்பம் போல் விற்பனை செய்யும் வாய்ப்புள்ளது. 

NFT-ல் உள்ள பிரச்சனைகள். [Problems in NFT]

இதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்று பார்த்தோமேயானால், ஒரு புகைப்படத்தை NFT ஆக மாற்ற கணினியின் உதவி அவசியம். கணினி ஓடுவதற்கு மின்சாரம் அவசியம். பெரும்பாலும் மின்சாரம் உருவாக்க எதையாவது எரிக்க வேண்டும். அதனால் உலக வெப்பமயமாதல் போன்ற ஆபத்துக்கள் இதில் உள்ளது. 

என்னுடைய NFT Hack செய்யப்பட்டால் என்ன செய்வது? [What should I do if My NFT was Hacked]

பெரும்பாலும் இது ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி யாரேனும் ஏமாற்றலாமே தவிர, ஹேக் செய்யும் சாத்தியக்கூறுகள் இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் இதுவும் கிரிப்டோகரன்சிகள் இயங்க பயன்படும் BLOCKCHAIN தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாகும். இதை ஹேக் செய்வது மிக மகக் கடினம் என்று பல வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

தற்போது அதிகப்படியான NFTகள் Ethereum மற்றும் Decenterland Blockchain மூலமாகவே இயங்கி வருகிறது. 

தற்போது அதிக விலையுள்ள NFTகள் சிலதைப் பார்ப்போம். 

 • BEEPLE- EVERYDAYS 5000 DAYS.
 • இந்த NFT, 5000 NFT-க்கள் ஒன்றாக இணைந்தது. ஒரு நபர் 5000 நாட்கள் ஒவ்வொரு NFTஆக உருவாக்கி, அதை மொத்தமாக ஒரே NFTஆக விற்பனை செய்தார். இதை உருவாக்க அவர் 14 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். இதன் மதிப்பு 69.3M டாலர்கள்.
  • ஒரு நபர்  தன்னுடைய ட்வீட் ஒன்றை NFTஆக மாற்றி விற்பனை செய்தது மூலம், 2.9M டாலர்கள் ஈட்டினார்.
  • இன்னொருவர் நபர் NFTல் ஒரு வீட்டை உருவாக்கி, அதை 5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்தார். இதுதான் NFTல் உருவாக்கப்பட்ட முதல் வீடு எனலாம். 

 

இது போன்று பலர், விளையாட்டாக NFT உருவாக்கி, பல மில்லியன்களைக் குவித்துள்ளனர். நீங்களும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதை முயற்சி செய்யலாம். 

 

 

நான் எங்கே NFT வாங்குவது/ விற்பது? [Where Can I Buy or Sell my NFT]

இதற்கென்று இணையத்தில் பிரபலமாக இருக்கும் தங்கள் சிலவற்றைந் பார்க்கலாம். Opensea, Rarible, NFT Showroom Bakeryswap போன்ற தளங்களில், உங்களுக்கான கணக்கைத் தொடங்கி, நீங்கள் எளிதாக NFT வாங்க முடியும். ஆனால் இதில் சிக்கலும் உள்ளது. சாதாரணமாக சென்று அதன் விலையை கொடுத்து உங்களால் NFT வாங்க முடியாது.

NFT என்பது BLOCKCHAIN தொழில்நுட்பத்தில் இயங்குவதால், அந்த குறிப்பிட்ட BLOCKCHAIN-ன்  கிரிப்டோகரென்ஸி சிறிதேனும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் கிரிப்டோகரன்சி வாங்க வேண்டும். அதன் பின்னர் அந்தக் கிரிப்டோகரன்சி வைத்திருக்கும் Wallet-கு நீங்கள் வாங்கும் NFTஐ எளிதாக மாற்றிக் கொள்ளலாம். பயனர்களின் பாதுகாப்பதற்காகவே இந்த முறை பின்பற்றப்படுகிறது. 

இது சற்று கடினமாகக் தெரிந்தாலும், பாதுகாப்பிற்காக இதை நாம் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

 

இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது, இதிலெல்லாம் நான் முதலீடு செய்ய மாட்டேன் என நினைத்தால், ரிஸ்க் எடுப்பவர்கள் தான் வாழ்வில் முன்னேறுகிறார்கள் என்பதை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.

 

பின்குறிப்பு:-  தற்போது இந்திய அரசு இது போன்ற டிஜிட்டல் சொத்துக்களுக்கு 30 சதவீதம் வரி விதித்துள்ளது. இதையும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும். 

 

பொறுப்புத்துறப்பு:- இது முழுக்க முழுக்க கற்பித்தல் நோக்கத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்கள். முதலீடு செய்யும் முன்பு அனைத்து விஷயங்களையும் அறிந்துகொண்டு, உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கட்பட்டுத் தொடங்க வேண்டும் என்பதே என் கருத்து.

 

Leave a Reply

Your email address will not be published.